அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட முத்துநகர் பூங்காவில் நகர்ப்புறங்களை பசுமையாக்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு நகரப்புறங்களை பசுமையாக்கும் முகாமினை தொடங்கி வைத்து, அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார்.