சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள இந்திரா நகர் 3வது தெருவில், பாதாள சாக்கடை திட்டத்தில் துணை ஒப்பந்ததாரராக வேலை செய்து வருபவர் கல்லல் விநாயகர் கேட்டு பகுதியைச் சேர்ந்த அஜித் (27). அவர், பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக 310 சென்ட்ரிங் இரும்பு சீட்டுகளை வைத்திருந்தார். இதில் 65 சீட்டுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.