சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல்முடிக்கரை, பூவந்தி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பெறப்பட்ட மனுக்கள், திருப்புவனம் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.