சென்னை மதுரவாயலில் உள்ள விற்பனையகத்தில் அண்மையில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரூ. 62 லட்சம் மதிப்புள்ள 85 ஐபோன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த கைப்பேசி விற்பனையகத்தின் பொதுமேலாளர் தேவநாதன், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின் போலீஸார் நடத்திய விசாரணையில், விற்பனையகத்தின் மேலாளர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கோயில்ராஜ் (31), கைது செய்யப்பட்டார்