வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 22 பட்டப்படிப்பு படித்து விட்டு பால் கறக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த பட்டதாரி பெண் கவி வயது 19 என்பவருக்கும் கல்லூரியில் படிக்கும் பொழுது காதல் ஏற்பட்டது. இருவரும் வட மதுரையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு கழுத்தில் மாலையுடன் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.