சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி அருகே சிவல்பட்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பப்பாளி, வாழை, மரவள்ளிக்கிழங்கு மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்தும் சேதமடைந்தன. கண்ணன் என்ற விவசாயியின் தோட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்டிருந்த 800 பப்பாளி மரங்களில், அறுவடைக்கு தயாரான சுமார் 300 மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.