புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் டிஎல்சி மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் டிஎல்சி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மூத்த சிவில் நீதிபதியுமான ராஜேந்திர கண்ணன் ஐநா சபையில் உலக நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிறுவர்கள் என ஒப்பந்தம் இருப்பதாக தெரிவித்தார்.