தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிலுவைப்பட்டி உப்பளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நகர ஏ.எஸ்.பி.மதன் உத்தரவின் பேரில் பாலமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உப்பளத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.