அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூன் மாதம் 11-ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களிடம் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை அக்கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று வழங்கினர்.