மினி சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 11க்கும் மேற்பட்டோர் படுகாயம் – ஊத்தங்கரை அருகே பரபரப்பு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த மினி சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 11க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி அருகே உள்ள கலந்திரா கிராமத்தைச் சேர்ந்த 22 பேர், நேற்று இரவு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பும் பொழுது விபத்து