சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலுள்ள பூங்கா நகரில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில், பதினெட்டாம் கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (36) பணம் எடுக்க வந்திருந்தார்.அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (29) என்பவர், "உங்கள் ஏடிஎம் கார்டை கொடுங்கள், நான் பணம் எடுத்து தருகிறேன்" எனக் கூறி முத்துக்குமரனிடம் இருந்து கார்டையும் ரகசிய குறியீட்டையும் பெற்றார். அதன் பிறகு, பணம் எடுக்காமல் “கார்டு வேலை செய்யவில்லை” எனக் கூறி, அவருக்கு வேறு கார்டை கொடுத்து ஏமாற்றியுள்ளார்