தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை மூன்று பேர் சேர்ந்து நடுரோட்டில் வெட்டும் சம்பவம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இது குறித்த வீடியோ பொதுமக்களால் எடுக்கப்பட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு தற்போது இன்று காலை முதல் வைரலாகி வருகிறது. இச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.