தமிழ்நாடு காவல் தினத்தையொட்டி அரியலூர் ஆயுதப்படை அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா சாஸ்திரி தொடங்கி வைத்தார். மேலும் ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தது மட்டுமின்றி தானும் ரத்ததானம் செய்தார். பின்னர் ரத்ததானம் செய்த மாவட்ட எஸ்பிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.