சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர், கேட்கும் கருவி உள்ளிட்ட உதவிப் பொருட்களை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், முகாமை பார்வையிட்டார்