சிவகங்கை மாவட்டம், பொன்னங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரவலசை கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமையால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்கிராமத்தில் குடியேறி வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது, 30 வீடுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.