அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி என்பவர் கைது.