வேடசந்தூர் அடுத்த லட்சுமணன் பட்டி நால்ரோடு அருகே பேட்டரிக் பள்ளி முன்பாக முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரின் பின்பக்கமாக பவானியில் இருந்து தொழிலதிபர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் டிராக்டர் டிரைவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். காரை ஓட்டி வந்த தொழிலதிபரும் படுகாயம் அடைந்தார். காரில் வந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள் லேசான காயங்களுடன் தப்பினர். நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். வேடசந்தூர் போலீசார் விசாரணை.