சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, சிவகங்கை ஆர்.டி.எம். கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார். வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமாகியுள்ளார். அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காத நிலையில், பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.