தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சகிமா இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடைகள் மற்றும் பொதுமக்களிடம் வசூல் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சகிமா புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடை வாசல் பகுதியில் நின்று கொண்டு மதுபான கடைக்கு வரும் நபர்களிடம் வசூல் ஈடுபட்டு வந்துள்ளார்.