எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து மாரத்தான் ஓட்ட போட்டி நடந்தது. இதில் 500 மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். எட்டு கிலோமீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓட்டப் போட்டியில் நடந்தது. முதல் 10 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.