வேடசந்தூர் அருகே உள்ள அச்சனம் பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி வயது 42. அரசு பஸ் டிரைவர். திண்டுக்கல் மாத்தினிப்பட்டி அரசு பஸ்சில் வேலை பார்த்த இவர் நேற்று இரவு டெப்போவில் பஸ்சை நிறுத்திவிட்டு மீண்டும் காலையில் பஸ்சை இயக்குவதற்கு அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் எழுந்த அவர் அருகில் படுத்திருந்த டிரைவர் கண்டக்டர்களிடம் நெஞ்சுவலிப்பதாக கூறிவிட்டு சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவரை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.