தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் சுப்பையா வித்யாலயம் தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து காலை உணவை பள்ளி மாணவ மாணவியருக்கு பரிமாறினார் மேலும் அங்குள்ள சமையலறையையும் பார்வையிட்டு ஆய்வு கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் மாணவ மாணவியரிடம் உணவு எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.