வேடசந்தூர் அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 35) கோவையில் தொழில் செய்து வருகிறார். இவரது தோட்டத்தை அவரது தந்தை முத்துச்சாமி (61) பராமரித்து வருகிறார். முத்துச்சாமி வீட்டில் தூங்கி எழுந்து நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்ற பொழுது தோட்டத்தில் 50-ஆயிரம் மதிப்புள்ள மின் வயர்கள் மற்றும் மின் மோட்டார் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மோட்டார் மற்றும் மின் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து வேடசந்தூர் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.