தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த திராவிட கழக தலைவர் வீரமணி நிருபர்களிடம் கூறுகையில், அதிமுகவை ஆளுநரை வைத்து உடைத்ததும் பாஜக தான். இப்போது சேர்க்க நினைப்பதும் அவர்கள் தான். என்ன நினைத்தாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்றார்.