தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய நடந்த முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த லட்சுமணன் என்பவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் நேற்று இரவு உடையாளூரில் அவரது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.