ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இது குறித்து சோளிங்கர் தாசில்தார் செல்வி மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் பாணாவரம் போலீசாருடன் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி இது குறித்து விசாரித்து வருகின்றனர்