சிவகங்கை நகர வீதிகளில், ராமர்–கிருஷ்ணர் போன்ற தெய்வ வேடம் அணிந்து, வீடு வீடாகச் சென்று யாசகம் தேடும் கலைஞர்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சமூகத்தினர், தற்போது மதுரையில் வசித்து வருகின்றனர். மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர், ரமேஷ் ஆகிய இருவரும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஊர்களுக்குச் சென்று, பலவிதமான வேடமிட்டு யாசகம் செய்து பிழைத்து வருகின்றனர்.