தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் மகளிர் கல்லூரியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பெண் கல்வி மற்றும் பெண் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க வலியுறுத்தியும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலய முன்பிருந்து துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.