புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் 127 பேரை காப்பாற்றிய அம்மாபட்டினம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜா சிறந்த ஓட்டுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் விழா எடுத்து விருது வழங்கப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் அம்மாபட்டினத்தில் தெரிவித்தார்.