வீராசாமிநாதன் மகனது திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அக்டோபர் 9-ம் தேதி வேடசந்தூர் வருகை தர உள்ளார். அவருடன் தமிழகத்தின் 9 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் துணை முதல்வர் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் புதியதாக 7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தையும், வேடசந்தூர் பேரூராட்சியின் சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடமும், மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தையும் ஆய்வு...