அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு 03 கோடி மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனையொட்டி தற்போது கட்டிடத்தின் மேற்கூரை அமைத்தல், மேடை அமைத்தல், நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.