*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலமாக சென்ற ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க லேசான தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தை கலைத்தனர்.*