அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி தேன்மொழி. இவருக்கும், அவரது மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவர் சமாதானம் செய்த நிலையிலும், மனமுடைந்து காணப்பட்ட தேன்மொழி வீட்டின் கதவை உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதில் உயிரிழப்பு.