ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி சார்பில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் எச்.எம். ஆடிட்டோரியம் அண்ணா சாலை பகுதியில் நடைபெற உள்ளது. முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தல், புதிய குடும்ப அட்டை பெறுதல் பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனுக்களாக அளிக்கலாம். மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்