தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளாளர் ரசல் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கை மற்றும் வரி விதிப்பு பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக பேசக்கூடாது எனக் கூறி சிபிஐ மாநில செயலாளர் ரசல் பேசிய மைக்கை பிடுங்கியுள்ளார்.