தூத்துக்குடி முத்தையாபுரம் பொட்டுக்காடு மேல தெருவில் வசிப்பவர் பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவர் தூத்துக்குடி ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் உள்ள வெள்ளப்பட்டி அருகில் பாலம் கட்டும் குடோனில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.