சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்ய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 43 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சியின் மூத்த தலைவர் சீதாராம்யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.