வேடசந்தூர் அருகே உள்ள பொம்முலு கவுண்டர்புதூர் பகுதியில் கருமலை ஓடை செல்கிறது. இந்த ஓடையின் அருகே மர்ம நபர்கள் மண்களை அள்ளி சென்று விட்டனர். பாதாளமாக காட்சியளிக்கும் அப்பகுதியில் மர்ம நபர்கள் புளிய மரத்தைச் சுற்றி மண்ணள்ளியதால் அந்தரத்தில் புளியமரம் நிற்கின்றது. மேலும் மின் கம்பங்களை சுற்றியும் மண்ணள்ளி விட்டதால் மின்கம்பம் எப்பொழுது வேண்டுமானாலும் சாயும் நிலையில் உள்ளது. அரசின் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு அந்தரத்தில் உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரியவில்லை