நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் தினசரி காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கூடலூர் பகுதியில் காட்டு யானை ஒன்று உலா வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். மேலும் காலை நேரங்களில் வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது