சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த கண்ணப்பன் (49) என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தொடர்ந்து உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவர்கள் அவருக்கு மது அருந்தக்கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும் மன அழுத்தத்தில் இருந்த கண்ணப்பன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.