தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மறைந்த திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி திடலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அந்த பந்தலில் அன்னதானம் நடைபெற்றது.