சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள கிளை நூலகத்திற்கான புதிய கட்டிடத்தை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. ப. சிதம்பரம் ஆகியோர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி ப. சிதம்பரம் முன்னிலையில், இன்று (5.9.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.