எரியோட்டில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் சக்கரபாணி, வேடசந்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநில திமுக துணைப் பொதுச் செயலாளருமான திருச்சி சிவா, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையன், எரியோடு பேரூர் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.