அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் இன்று பௌர்ணமி மற்றும் சந்திர கிரகணத்தை ஒட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை ஒட்டி அரியலூர் நகரில் உள்ள ஆலந்துறை திருக்கோவிலில், சித்தி விநாயகர் திருக்கோவில், ஐந்தொழில் விநாயகர் திருக்கோவில், சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட அரியலூரில் உள்ள அனைத்து திருக்கோவிலிலும் சிறப்பாக வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.