தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பூந்துருத்தியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை மாணவர்களும் வாங்குகின்றனர். இதனால் இளம் வயதிலேயே அவர்கள் குடிகாரர்களாக மாறும் நிலை உள்ளது என பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.