தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே அமைந்துள்ளது பட்டினமருதூர் கிராமம் இங்கே ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கெமிக்கல் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து அடிக்கடி நச்சுக் கழிவுகள் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் அந்தப் பகுதியைச் சேர்ந்த குளம் மற்றும் வெளியில் விடுவதால் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவது உடன் அந்த நீரை பருகும் கால்நடைகள் இறக்கும் சூழ்நிலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.