திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் திடீர் நகர், சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், வேடசந்தூர் ரோடு ரோஜா நகர், ஆகிய இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் செல்கின்றது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.