தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன் மடம் கிராமத்தில் ஊரின் நடுவே கிராம மக்கள் பயன்படும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஒப்பந்ததாரரின் கவனக்குறைவால் அருகிலுள்ள மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டிடம் இடிந்து தரை மட்டமாக விழுந்து சேதமடைந்துள்ளது.