சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டி பகுதியில் கால்நடை சுகாதார முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமில் கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து சிகிச்சை பெற்றனர். தடுப்பூசிகள் போடப்பட்டதுடன், கால்நடை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.இம்முகாமில் சிவகங்கை மாவட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு சேவையாற்றினர்.