தஞ்சாவூர் மாதா கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பத்தாவது தெருவில் சுற்றுச்சுவர் உட்புறத்தின் சிமெண்ட் தளத்தின் விரிசலுக்கு கீழே 14 கண்ணாடி விரியன் பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உயிருடன் மீட்கப்பட்டன. இதனை அருங்கானூர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.